Tirupathur

News October 10, 2024

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பற்றோர் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் படித்து வேலை கிடைக்காத நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

இடர்பாடுகள் குறித்து அறிய மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. எனவே மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் குறித்து உடனுக்குடன் அறிய “TN Alert” எனும் செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து உடனுக்குடன் தகவல்களை அறிந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

திருப்பத்தூரில் மக்கள் குறை தீர்க்க கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

News October 9, 2024

திருப்பத்தூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து குறைந்த பட்ச ஆதார விலையில் அரவை கொப்பரை தேங்காய் உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகிய பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விற்பனை கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

News October 9, 2024

இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் அவதி

image

திருப்பத்தூர் பஞ்சனம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. சந்தை வழிப் பாதையை காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்காக பயன்படுத்தி வந்ததாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அது கால்வாயாக மாறிவிட்டதால் மயான பாதை செல்லும் வழியாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News October 9, 2024

கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.

image

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன், விஜயகுமார், ராஜவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் இரண்டு பட்டாக்கத்தி மற்றும் 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

News October 8, 2024

திருப்பத்தூரில் ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு குழு டாக்டர் எம் ஆர்த்தி தலைமையில் சுகாதார நிலையம் அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை குறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

திருப்பத்தூர் எஸ்.பி., பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்ன பின்ன தெரியாத நபர்கள் TELEGRAM, WHATSAPP, FACEBOOK VIDEO CALL மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் விழிப்புடன் இருப்போம் மோசடிகளை தவிர்ப்போம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துள்ளார்.

News October 8, 2024

திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் 6 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை தலா ரூ.1,200 பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!