Tirupathur

News October 14, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வடபுதுபட்டு 20.80 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக காவலூர் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்; ஆம்பூரில் 18 மி.மீ, வட புதுப்பட்டு 20.80 மி.மீ, காவலூரில் 2 மி.மீ, வாணியம்பாடி 6 மி.மீ, நாட்டறம்பள்ளி 4.20 மி.மீ, திருப்பத்தூரில் 2.40 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியுள்ளது.

News October 14, 2024

திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று காலை அறிவித்தார். இதனால் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, மாதனூர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு எண்கள் வெளியீடு

image

தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தலை போலீசார் தொடந்து கண்கானித்து வருகிகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூரில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்தல் குறித்த தகவல்களை 9159959919 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் மேலும், கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளார்.

News October 13, 2024

திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.

News October 11, 2024

திருப்பத்தூரில் செய்தியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தியாளர்கள் அலுவலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்கள் தங்கள் நிறுவனத்தின் லோகோ வைத்து பூஜை செய்து கொண்டாடினார்கள். உடன் அனைத்து நிறுவன மாவட்ட செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பொறி மற்றும் பழம் வகைகள் வழங்கி சிறப்பித்தனர்.

News October 11, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத பூஜை வாழ்த்து

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பேனரில் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு விழாவை கொண்டாடி மகிழ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

News October 11, 2024

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அமைச்சர்

image

ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இந்த கடைசி 5 மாதங்கள் தான் மிக முக்கிய காலகட்டம்.நல்ல கல்லூரியில் சேர்வதன் மூலம் உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கல்வியில் கவனம் செலுத்துவது போன்று விளையாட்டிலும் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

News October 10, 2024

திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி அறிக்கை,
கலைஞர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரருமான
முரசொலி செல்வம் இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும்
திருப்பத்தூர் மாவட்ட முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கழக கொடியை அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றார்.

News October 10, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

குழந்தை தொழிலாளர் குறித்து காவல்துறை விழிப்புணர்வு பதிவு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில். குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் “குழந்தைகள் அறிவை சம்பாதிக்கட்டும், பணத்தை அல்ல” குழந்தை தொழிலாளர்களை பற்றி தகவல் தெரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!