Tirupathur

News October 15, 2024

திருப்பத்தூர் மாவட்ட சாதனையாளர்களுக்கு இன்றே கடைசி நாள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிரதம மந்திரியின் இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை பெற தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி தினம் என்பதால் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் விண்ணப்பிக்கலாம்.

News October 15, 2024

வாகன ஓட்டிகளுக்கு திருப்பத்தூர் எஸ்பி அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாமுகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களை இயக்குவதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் கவனத்துடன் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்ததியுள்ளார்.

News October 15, 2024

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 52.20 மிலிமீட்டர் மழை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 52.20 மிலிமீட்டர் குறைந்தபட்சமாக கேத்தாண்டபட்டி 12 மிலிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பதிவாகி உள்ள விவரம் வருமாறு: ஆம்பூரில் 24.20 மி.மீ, வடபுதுபட்டு 23.20மி.மீ, காவலூர் 19 மி.மீ, வாணியம்பாடி 32 மி.மீ, நாட்றம்பள்ளி 20 மி.மீ, கேத்தண்டம்பட்டி 12 மி.மீ, திருப்பத்தூரில் 52.20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News October 15, 2024

ஓடும் ரயிலில் ரேஷன் அரிசி கடத்திய 4 பெண்கள் கைது

image

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் நேற்று இரவு பொது பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது 1100 கிலோ ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு கடத்திய ஆனந்தி, சுமதி, சிவகாமி, லட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

News October 15, 2024

திருப்பத்தூரில் இன்று பள்ளி கல்லூரிகள் செயல்படும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று காலை அறிவித்தார். இதனால் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, மாதனூர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்த வாலிபர் பலி

image

ஆம்பூர் – பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்த ஒருவர் நேற்று மாலை தவறி விழுந்து அதே ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 14, 2024

திருப்பத்தூர்:இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (14.10.2024 ) ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

News October 14, 2024

திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.

News October 14, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்ட தேதி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் (18.10.2024) அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண ஆட்சியை அழைப்பு விடுத்துள்ளார்.

News October 14, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (இன்று அக்டோபர் 14) மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், மாதனூர், நாட்டறபள்ளி, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!