Tirupathur

News October 25, 2024

திருப்பத்தூர் காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் “மழைக்காலங்களில் தங்கள் வாகனங்களை சீரான வேகத்தில் இயக்க” திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

News October 25, 2024

பாலாற்றில் இறங்கவும் குளிக்கவும் அம்பலூர் ஊராட்சி நிர்வாகம் தடை!

image

வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் ஊராட்சி சார்பில் பாலாற்று பகுதிகளை கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், மேலும் ஆந்திரா தமிழக எல்லையில் ஏரிகள் நிரம்பி, உபரி நீர் பாலாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் ஆற்றில் இறங்கவும் வேண்டாம். மேலும் தங்கள் குழந்தைகளை பாலாற்று அருகில் அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 25, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9,10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இம்முகாமில் 18 வயது நிரம்பிய அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News October 24, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா,ஆலங்காயம்,கந்திலி, நாட்றம்பள்ளி, உமராபாத், ஆம்பூர் தாலுகா, உள்ளிட்ட பகுதியில் (இன்று அக்டோபர்.24 இரவு) ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.  இன்று இரவு முழுவதும் மேற்பட்ட பட்டியல் உள்ள போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 24, 2024

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 06005 அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில் வழியாக சென்று அடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News October 24, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை முகநூல் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்க்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு அளிப்பதாக மோசடி நடைபெற்று வருகிறது. ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கலாம் எனவும், 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

News October 24, 2024

இன்று நடைபெற இருந்த போலியோ ஒழிப்பு பேரணி ஒத்திவைப்பு

image

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் போலியோ ஒழிப்பு பேரணி நடைபெறுவதாக இருந்த பேரணி தொடர் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் M. ராஜன்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

News October 24, 2024

டானா சூறாவளி புயல் காரணமாக மேலும் 28 ரெயில்கள் நிறுத்தம்

image

ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கத்தில் செல்லும் ரெயில் எண் 12552 பெங்களூர் ஏசி எக்ஸ்பிரஸ், 22603 விழுப்புரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்,22851 விவேக் எக்ஸ்பிரஸ், 12841 ஹவுரா எக்ஸ்பிரஸ், 22644 பாட்னா எக்ஸ்பிரஸ்,22826 ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12509 கௌஹாத்தி எக்ஸ்பிரஸ், 12842 கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 28 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

இரவு ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல்நிலையங்களில் மற்றும், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (23.10.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த நம்பரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

News October 23, 2024

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை!

image

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்ததை எடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மாலை 5 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று புதிய ஓட்டுநர் உரிமம் வாகனம் பதிவு ஆகியவையும் சோதனை உட்படுத்தப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!