India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (10.01.2025) மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், முதல்வர் கூடுதல் செயலாளருமான ஆர்த்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வளர்ச்சிக்கான திட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த தொழில் முனைவோர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ சமூக மேம்பாட்டு திட்டம் மூலம் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது 3.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்தார்.
ஏலகிரி மலை கிராமத்தை சேர்ந்த நந்தினி மற்றும் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நந்தினி பொங்கலுக்கு புதிய புடவை வாங்கி தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதனை அவர் மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாய் வீட்டில் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவரும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தர ஏற்பாடு செய்து தரப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணைய தளத்தைக் காணலாம் என்றும் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் வரை படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் திராவிட கழகம் மாவட்ட செயலாளர் கலைவாணன் இன்று நள்ளிரவு போலீஸுல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 8ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூர் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பெரியார் குறித்து தரக்குறைவாக பேசியதாக யூடியூபில் வீடியோ வெளியானது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், இன்று (09.01.2025) திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளந்தென்றல் மற்றும் கடலரசி மருத்துவர்களான இருவருக்கும் , குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடலரசி இளந்தென்றலின் வீட்டில் விஷம் குடித்துவிட்டு இருந்துவிட்டதாக கடலரசியின் குடும்பத்தினருக்கு இளந்தென்றல் தெரிவித்தார். எனவே, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடலரசியின் தந்தை ஆம்பூர் கிராமிய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இடையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, அந்த நிலத்தை வாணியம்பாடியை சேர்ந்த திமுக உறுப்பினர் ஜெகன் என்பவர் நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுவதாக இன்று நாகாராஜின் குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ரூ.4.93 கோடி மதிப்பில் புதிய உள் விளையாட்டு அரங்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே உதயநிதிக்கு திருப்பத்தூர் எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.