India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட செயற்பொறியாளர் பாட்ஷா முகமது நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் துணை மின் நிலையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை 18 ம் தேதி காலை 9 மணி மாலை 5 மணி வரை தாலுகா அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ,புதிய பேருந்து நிலையம், ஆரிப் நகர், கோட்டை தெரு, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதல் முறையாக எருது விடும் விழா ஜமுனாபுதூரில் நடைபெற உள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல் பரிசாக ரூபாய் 100001, 2வது பரிசாக 75001, 3வது பரிசாக 50001 என 65 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வெற்றி பெறும் காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
திருப்பத்தூரில் பிரபல சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் இன்று (16.01.2025) பொங்கல் விடுமுறையொட்டி, பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் 13 பேருடன் சுற்றுலா வந்த மினி வேன் ஒன்று மலைச்சாலையில் உள்ள 4வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
திருப்பத்தூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தனித்தனியே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருப்பத்தூர் மீனாட்சி பள்ளியில் ஜனவரி 21, கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 22 அன்றும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியில் நேற்று போலீசாரின் வாகன தணிக்கையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பூங்குளம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த செல்வகணபதி ஆகிய இருவரை ஆலங்காயம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரிசிலாப்பட்டு ஊராட்சியில் இன்று (ஜனவரி 14) தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மற்றும் பார்கள் வரும் (15.01.2025) திருவள்ளுவர் தினம் மற்றும் (26.01.2025) ஆகிய இரண்டு தினங்களில் இயங்க கூடாது எனவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு, கடும் தண்டனை அளிக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தில் இன்று (13.01.2025) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் பானையில் பொங்கலிட்டு, பொங்கல் விழாவை கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து உறியடித்தல், தாரைத்தப்பட்டையுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர், கீழ்க்குப்பம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த ஆசிரியர் பொன் ஏழுமலை நினைவாக அதிமுக உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று(ஜன 12) நடைபெற்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து 1800 ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், அறுசுவை உணவுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் அடுத்த பெத்தூர் ஊராட்சி காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் இன்று (ஜனவரி.12) ஓரு விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலங்கயாம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.