India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் “தூய நெஞ்சக் கல்லூரியில்” உங்கள் வெற்றி எங்கள் நோக்கம் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை 24.01.2025 நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இதில், திருப்பத்தூர் மாவட்ட பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் கோட்டத்திக்குட்பட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், மின்னூர், ஆலாங்குப்பம், நாச்சியார்குப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, வீராங்குப்பம், குமாரமங்கலம், மணியார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 22.01.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்ததா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மொத்தமாக 57 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் இன்று காலை 10 மணி முதல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில் கத்தாரி பேருந்து நிலையம் அருகே உள்ள சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி தலைவர் அனிதா மோகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் (26.01.2025) அன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவும் ஆணையிட்டு உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காண, ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் கோட்டத்திக்குட்பட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், மின்னூர், ஆலாங்குப்பம், நாச்சியார்குப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, வீராங்குப்பம், குமாரமங்கலம், மணியார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2025) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 33 வெவ்வேறு வகையான தற்காலிககாலிபணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://tirupathur.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதை திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ஆம் தேதியன்று ரூ.100000/- காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை 2 கையேடுகளுடன் மாவட்ட ஆட்சியரகம், முதல் தளம், பி. பிளாக் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்னுங்க.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (21.01.2025) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு முகாமில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பெற்றதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.