India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இன்று (31-01-2025) கடைசி நாள் என்பதால் மாவட்டத்தில் உள்ள காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளை மாலைக்குள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்ய மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
திருப்பத்தூர் அருகே பூரிகமாணிமிட்டா பகுதியைச் சேர்ந்தவர் மாரி இவர் கதிரிமங்கலம் பகுதியில் மின்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். கதிரிமங்கலம் பகுதியில் திடீரென மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு பழுது சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (30.01.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, அவர்கள் தலைமையில் “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி” எடுக்கப்பட்டது. இதில் 40 க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சார்பில் இன்று, திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுடைய வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வாகனத்தில் செல்லும்போது வேகத்தை கட்டுப்படுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை ஒட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன் கையெழுத்து பிரச்சாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேருந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் போக்குவரத்து விதிகள், சாலையில் வாகனம் இயக்கும் முறைகள், சாலையில் உள்ள சின்னங்கள், சிக்னல்கள் போன்றவை குறித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முகமது அப்ரார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்பூர் நகர் பகுதியில் காரில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், முகமது அப்ராரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா பரிந்துரைபேரில் ஆட்சியர் தர்ப்பகராஜ் முகமது அப்ராரை குண்டர் சட்டத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இளம் குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி ஷ்ரேயா குப்தா அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தையை திருமணம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு போஸ்டரை காவல்துறை பகிர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டி, அம்பலூர், காவலூர், ஆலங்காயம், திம்மாம்பேட்டை, ஏலகிரி மலை, ஜங்பளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (ஜன.30) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (28.01.2025) மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் திருப்பத்தூர் வட்டாச்சியர் நவநீதம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.