Tirupathur

News January 19, 2026

திருப்பத்தூர்: பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா (45). இவர் அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜன.18) குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் பூர்ணிமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 19, 2026

திருப்பத்தூர் பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகின்ற ஜனவரி 26, குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்திடவும் வரவு செலவு கணக்குகள் பொதுமக்கள் அறியும்படி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர் கலந்து கொள்ளவும் கண்காணிக்க நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ரிவித்துள்ளார்

News January 18, 2026

திருப்பத்தூர்: திருமண தடை நீங்க அற்புத கோயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

திருப்பத்தூர்: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். 12th முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

திருப்பத்தூர் பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <>இணையதளத்தில் <<>>விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

திருப்பத்தூர்: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு நேரில் சென்று கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

திருப்பத்தூர்: ரூ.5லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

திருப்பத்தூர்: வீட்டில் மது விற்ற பெண் உள்பட இருவர் கைது!

image

திருப்பத்தூர், ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் தார்வழி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சூர்யா வயது (50), அதே பகுதியை சேர்ந்த அன்பு மனைவி சிவரஞ்சனி வயது (31) ஆகிய 2 பேரும் வீட்டுக்குள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை ஏய்த்து தெரியவந்தது. பின், போலீஸார் 2 பேரை கைது செய்து 19 புல் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்த்து வீசாரித்து வருகின்றனர்.

News January 18, 2026

திருப்பத்தூர்: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!