Tirupathur

News March 31, 2024

6 அடி நீளம்… படமெடுத்த நாகம்

image

நாட்டறம்பள்ளி அடுத்த வள்ளியூர் கிராமத்தில் கருணாமூர்த்தி என்பவரது குடியிருப்பு வீட்டில் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

News March 30, 2024

ஜோலார்பேட்டை: மாவட்ட எஸ்பி ஆய்வு

image

ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ள வக்கணம்பட்டி, பால்னாங்குப்பம்,  ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News March 30, 2024

திருப்பத்தூர்: உயிர் தப்பிய பயணிகள்

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

News March 30, 2024

திருப்பத்தூர்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

சேலம் சங்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு இன்று ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் திருப்பத்தூர் நோக்கி சென்றபோது ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். 

News March 30, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

News March 30, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து:ஒருவர் பலி

image

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் ஜாவித் (28). இவர் நேற்று (மார்ச்.29) வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து தானபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

ஏலகிரி மலையில் 2 நாட்கள் முகாம்

image

ஏலகிரி மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், கைபேசி எண் இணைத்தல், முகவரி மாற்றுதல், புதியதாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு இன்று, மற்றும் நாளை ஆகிய 2  நாட்கள் முகாம் நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தெரிவித்துள்ளார். 

News March 29, 2024

ஆம்பூர் வந்த வில்லன் நடிகர்

image

ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை முன்பு இன்று மாலை 6 மணியளவில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அவருடன் சென்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

News March 29, 2024

திருப்பத்தூரில் 3 பேர் கைது

image

திருப்பத்தூர் பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கணேஷ், மேற்கத்தியனூர் துளசி,  திருப்பத்தூர் டிஎம்சி நகர் பகுதியைச் சேர்ந்த பசுபதி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2024

தெரு நாய் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 35 ஆவது வார்டு பகுதியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் இன்று (மார்ச்.29) விளையாட சென்ற 2 சிறுவர்களை
துரத்திச் சென்று கடித்ததில் 2 சிறுவர்கள் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!