India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் பகுதியில் சுமி ஸ்டுடியோ நடத்தி வரும் நவீன் குமார் என்பவரின் வீட்டில் வருமான துறையினர் நேற்று (ஏப்.3) நள்ளிரவு முதல் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அவர் வீட்டில் கட்டு கட்டாகபணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானம் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த கைலாச கிரி மலைப்பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலிாயனார். நேற்று நடந்த இச்சம்பம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த உம்ராபாத் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை தமிழ்நாடு வணிகர் சங்க சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித், சமூக ஆர்வலர்கள், ஆம்பூர் பகுதியை சேர்ந்த வர்த்தக நிறுவன தலைவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை தேமுதிக சார்பில் மாவட்ட கழக பொருளாளர் ஐ.ஆஞ்சி தனது சொந்த செலவில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, விஜயகாந்தின் சமாதியை பார்க்க வரும் மக்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டது. உடன் தேமுதிக பொருளாளர் க.மகாதேவன், நகர கழக செயலாளர் எழினி ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி பூசாரி ஊர் பகுதியில் தனியாக இருந்த மங்கை என்ற மூதாட்டியின் காது மற்றும் மூக்கில் இருந்த நகைகளை கொடூரமாக அறுத்துக் கொண்டு சென்ற நாயனச்செரு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை நாட்றம்பள்ளி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுகவிற்கு நான் ஒருமுறை பலி ஆடாக இருந்தேன் தற்போது பாவம் மருத்துவர் பசுபதி பலி ஆடாக கிடைத்து இருக்கிறார் என சாடினார்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட தாயப்பன் வட்டம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட சாலையில் குவிந்துள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.