Tirupathur

News April 17, 2024

பெண் காவலர் குடும்பத்திற்கு எஸ்பி நேரில் ஆறுதல்

image

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இன்று(17ம் தேதி) ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை பெண் காவலர் பரிமளா உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இறந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

News April 17, 2024

ஜோலார்பேட்டை: வனச்சரக அலுவலர் முகாம்

image

ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News April 17, 2024

ஜோலார்பேட்டை அருகே கரடி நடமாட்டம்

image

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில் நேற்று இரவு ஏலகிரி காட்டில் மச்சகண் வட்டம் பகுதியில் மோகன் என்பவரின் வீட்டின் அருகே நாய்கள் தொட்ர்ந்து குறைத்து கொண்டிருந்தது. மோகன் வெளியே வந்து பார்த்து போது கரடி ஒன்று  நடமாடியதை பார்த்த அவர் கூச்சலிட்டுள்ளார்.சத்தம் கேட்ட கரடி அங்கிருந்த காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 17, 2024

எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் மாற்றம்

image

பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் லால் பாக் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை – மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் புறப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 17, 2024

ரயிலில் அடிபட்டு படுகாயம்

image

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை செவ்வத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சாகுல் என்பவர் தவறி விழுந்து அடிபட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2024

திருப்பத்தூர்: சித்திரை திருவிழா தொடக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பாவாடைக்காரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. நேற்று அம்மன் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 16, 2024

திருப்பத்தூர்: திமுகவில் இணைந்த பாமகவினர்

image

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுரில் மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி தலைமையில் வாக்கு சேகரித்தார். அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் பாஜகவுடன், பாமக கூட்டணி வைத்ததால் விரக்தி அடைந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் சின்ன மூக்கனூர் வார்டு உறுப்பினர் சிரஞ்சீவி தலைமையில் ஒன்று திரண்டு மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

News April 16, 2024

திருப்பத்தூர்: 3 நாட்களுக்கு விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனை கடையில் அனைத்தும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களவை தேர்தலையொட்டி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 16, 2024

திருப்பத்தூர்: பாமக நிர்வாகி மர்ம மரணம்

image

புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன்.  பாமக ஒன்றிய நிர்வாகியாகவும் இருந்தார்.  திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை கிராமத்துக்கு பைக்கில் சென்றபோது சிவராஜ் பேட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News April 16, 2024

தேர்தல் பணியில் 5164 பேர்

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!