Tirupathur

News April 25, 2024

3 பேர் மீது வழக்கு

image

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று திரியாலம் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதன் ராஜ் உள்பட 3 இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு இந்த வழியாக யாரும் செல்ல கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர். இவர்கள் 3 பேர் மீது ஜோலார்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் வேண்டுகோள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தேவை என்று வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் இளநீர் தண்ணீர் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும் வெயிலில் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

திருப்பத்தூர்: நீரில் மூழ்கி இருவர் பலி

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கொட்டை பகுதியில் வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக    ஜோதிகா (8) மற்றும் அவரது தம்பி ஜோதிஷ் (7) ஆகிய இருவரும் அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். திடீரென தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் சடலத்தை மீட்ட வாணியம்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 25, 2024

நாட்டறம்பள்ளி அருகே கங்கை அம்மன் அலங்காரம்

image

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று 24 ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

News April 24, 2024

திருப்பத்தூரில் 106.70 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். இந்நிலையில் இன்று  திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்த பட்சமாக 76.82 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

திருப்பத்தூரில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

திருப்பத்தூர்: ஆண் சடலம் கண்டெடுப்பு

image

ஆம்பூர் சான்றோர்குப்பம் அடுத்த வண்ணான்துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நகர போலிசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

விடியற்காலை பொங்கல் வைத்த பொதுமக்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இன்று (ஏப்ரல்.23) சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று விடியற்காலை ஒரு மணி முதல் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நாட்றம்பள்ளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 24, 2024

திருப்பத்தூர்: 104.11 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104.11 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 77.90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!