India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் அடுத்த, மாடப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட, உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இன்று (பிப்.10) திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், நாராயணன், மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கந்திலி ஒன்றியம் பெரிய கரம் ஊராட்சி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மக்கள் நல சங்கம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மனு அளித்தார். அதன் பேரில் இன்று (பிப். 10) கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பெரியகரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர் வட்டம், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (இன்று பிப்.10) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டது. இதில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள மலையில் உள்ளதால், தனியார் பேருந்துகள் நிற்காமல், செல்கின்றது. இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதியடைவதால் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல அப்பகுதி மக்கள், ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் நேற்று (09.02.2026) “முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் ₹26,00,000/- தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தனர்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (பிப்.9) தனது வீட்டு அருகே வாணியம்பாடி ரயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.