Tirupathur

News May 10, 2024

ஆம்பூர் அருகே சிறுமி தற்கொலை

image

ஆம்பூர் தாலுகா நாயக்கனேறி ஊராட்சி சோலை கொள்ளை பகுதியில் நேற்று இரவு (மே.9) 7 ஆம் வகுப்பு படித்துவரும் கிருஷ்ணமூர்த்தி மகள் பிரியதர்ஷினி (14) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அச்சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 10, 2024

கால்நடை மருத்துவமனை திறப்பதில்லை

image

பர்கூர் – திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சரிவர இருப்பதில்லை எனவும், இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக அருகே உள்ள நகரத்திற்கு கூட்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் மருத்துவமனையை தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 9, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மது விலக்கு பிரிவில் முதல் நிலை காவலராக ஆறுமுகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏழைரப்பட்டி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவம் இடத்திலேயே அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News May 9, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.09) கனமழை பதிவாக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

ஆம்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

ஆம்பூர் நகர தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் வேலூரில் இருந்து ஆம்பூர் வழியாக பேரணாம்பட்டு செல்லும் பைபாஸ் புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சாலை மூடப்பட்டுள்ளதால் ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே சென்று பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும். மேலும் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு அடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

News May 9, 2024

நம்மை காக்கும் திட்டத்தில் 2438 நோயாளிகள் பயன்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து 4 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனையில் 2438 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.98 லட்சத்து 10 ஆயிரத்து 825 செலுத்தப்பட்டதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

திருப்பத்தூர்: 4 பேர் மீது பாய்ந்த வழக்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி, கோனேரிகுப்பம், பழத்தோட்டம் பகுதிகளில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேதப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஒப்பந்ததாரர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News May 8, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தார் சாலையை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட புகாரில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். புது சொத்துக்களை சேதப்படுத்தினால் நடவடிக்கை பாயும்” என்றும் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்தார். 

News May 8, 2024

வாணியம்பாடி: புல்லூர் தடுப்பணையில் சாமி சிலை

image

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் அப்பகுதி இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது தடுப்பணையில் கிடந்த சாமி சிலை எடுத்து வந்த பார்த்த போது சாமி சிலை கண்விழித்து பார்த்ததாக சிலையை கூறி ஓட்டம் பிடித்தனர். அதிசய சிலை இங்கு எப்படி வந்தது என்பது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 8, 2024

திருப்பத்தூர்: 107.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 100.76 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 74.84டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!