Tirupathur

News April 28, 2024

ஏலகிரி மலையில் குவிந்த மக்கள்

image

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை எப்பொழுதும் சம சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

News April 28, 2024

கனவு ஆசிரியர் விருது – குவியும் வாழ்த்து

image

ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நதியா கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் உள்ள டேராடூன் பகுதியை சார்ந்து கல்வி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையறிந்த கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News April 28, 2024

ஆம்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று நள்ளிரவில் சென்னை – பெங்களூர் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பவர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.28) அதிகாலை உயிரிழந்தார்.

News April 28, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் பகுதியை சேர்ந்த மணிமேகலை (40) தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் உள்ள தனது மகளை பார்க்க வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் மணிமேகலையின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

சிக்னல் கிடைக்காததால் பயணிகள் அவதி

image

சென்னை – மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டது. அப்போது வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கிடைக்காததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.  அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

News April 27, 2024

திருப்பத்தூரில் 104.54 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.54 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்தார்.

News April 27, 2024

திருப்பத்தூர்: ரூ.16 கோடி செலவில் நவீனம்

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.

News April 27, 2024

திருப்பத்தூர்: இளைஞர் மரணத்தில் சந்தேகம்

image

திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரை சேர்ந்த பழனிவேல் மதுபோதையில் குடிசையில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர், பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 27, 2024

திருப்பத்தூர்: திமுக நிர்வாகி தம்பி மரணம்

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பி சதீஷ்குமார் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார்.  இச்செய்தி அறிந்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

News April 27, 2024

திருப்பத்தூர்: கோடைகால பயிற்சி

image

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தடகளம், கபடி,கூடைபந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து என 5 போட்டிகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது. ரூ.200 கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!