India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் 100 பாரன்ஹீட் டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழைக்கு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதாக இன்று திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.34 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட குருபவானிகுண்டா அடுத்த பூதிகான் பள்ளம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களிடம் இன்று(மே 15) பேசிய மாவட்ட திட்ட இயக்குநர், அம்மக்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இது வனப்பகுதி என்பதால் தொடர்ந்து இங்கு குடியிருக்க முடியாது என்றும் அறிவுறுத்தினார்.
நாட்றம்பள்ளி அருகே சடலை குட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(27). இவர் கால்கள் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுவதும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று(மே 14) எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், விழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட முகாம் சாா்பாக மாதனூா் அருகே ஆா்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் கல்லூரி மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இயற்கை வளங்களை காத்தல், மண் வளத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் இறைச்சி கடைகளில் உள்புற சுவற்றில் கட்டாயம் டைல்ஸ் போட்டு இருக்க வேண்டும். இறைச்சி கடைகளில் தூசி படியாமல் சூரிய ஒளி படாமல் இறைச்சிகள் விற்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை நகராட்சி ஆணையாளர் சந்தானம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு சார்பில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த 29 ம் தேதி துவங்கி நேற்று வரை தொடர்ந்து 15 நாட்கள் வரை நடைபெற்றது. நிறைவு விழாவானது இன்று நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு விளையாட்டு உடைகள் வழங்கப்பட்டது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருப்பத்தூர் மாவட்டம் 34ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 80.98% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.14 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் 81.79% பேரும், மாணவியர் 91.43% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.88% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.