Tirupathur

News May 3, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 108.86 பாரன்ஹீட் டிகிரி

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108.86 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக 84.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), திருப்பத்தூரியில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News May 3, 2024

பயங்கர தீ விபத்து 

image

ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் காய்ந்த முள்வேலி பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். கரும்புகையுடன் தீ பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

News May 3, 2024

கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் நேற்று பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீஸ் (24), திருப்பத்தூர் தண்ணீர்பந்தல் சரவணன்(35), சின்ன உடைய முத்துரை சேர்ந்த ஜவகர் (24). வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த நித்திஷ் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் புகை

image

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்பட்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் பொது பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. சக்கரத்தில் பழுது ஏற்பட்டு புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

News May 2, 2024

திருப்பத்தூர் : தேர்வு போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப தங்குமிடம் விளையாட்டு பயிற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் இதனை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

News May 2, 2024

பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் மாயம்

image

வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பாலாற்று பகுதியில் குளிக்க சென்ற பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பைஜான் நீர்மூழ்கி மாயமானர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளைஞரை தேடி வருகின்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 2, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

ஆம்பூர் அருகே திடீர் தீ விபத்து 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் இருந்து சேதமாகியது. இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 2, 2024

5 பேர் கைது: திடீர் திருப்பம்

image

நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!