Tirupathur

News May 21, 2024

அரசு மருத்துவமனை கட்டுமான பணியில் வடமாநில இளைஞர் பலி

image

தலைமை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த அபுதாஹிர் என்பவர் 8 ஆவது மாடியில் மேஸ்திரி வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 21, 2024

ஏலகிரி மலையில் பனி மூட்டம்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் கோடைகால விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று ஏலகிரி மலைக்கு செல்லும் 14 கொண்டை ஊசி வளைவுகளில் தற்போது பனி மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் 4 வது வளைவில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குடன் சென்றன. குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ந்தனர்

News May 21, 2024

ஜோலார்பேட்டை ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் மரணம்

image

ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர் .ஆர்.விநாயகமூர்த்தி. இவர், ஐஎன்டியூசி சங்கம் மாவட்ட தலைவராகவும் சிவாஜி ரசிகர் மன்றம் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் இன்று காலை10 மணியளவில் அவரது வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார் இவரது இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரில் மாலை 5 மணியளவில் நடை பெறும் என ஐஎன்டியூசி சங்கம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

News May 21, 2024

நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி விபத்து

image

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி அருகே ஓசூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த உஷா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News May 20, 2024

திருப்பத்தூர் அருகே விபத்தில் 3 பேர் காயம் 

image

நாட்றம்பள்ளி அருக திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் திடீரென நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News May 20, 2024

விண்வெளி கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர்!

image

திருப்புத்தூர் ஒன்றியம் செவ்வூரில் உள்ள தனியார் பள்ளியில் ‘ஸ்பேஸ் எக்ஸ்போ டி-24’ என்ற விண்வெளி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது . இக்கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசினார். இக்கண்காட்சியில் பூமியிலிருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும் செவ்வாய் மற்றும் சந்திரனை நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

News May 20, 2024

திருப்பத்தூர்: வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் கவனத்திற்கு ஒன்றிய அரசால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் பணிக்கு செல்ல வேண்டும் அல்லது தமிழக அரசின் அயலக நலத்துறை சார்பில் செயல்படும் சென்னை அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 20, 2024

திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு சுற்றி திரிந்த வாலிபர்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை நாட்களில் பல்வேறு பணிகளுக்காக அதிகாரிகளும் பொதுமக்களும் வந்து செல்வர்.  நேற்று விடுமுறை என்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை தவிர வேறு யாரும் வருவதில்லை. அப்போது வாலிபர் ஒருவர் அலுவலகத்திற்கு முன் வந்துள்ளார்.  அவர் 2 முதல் 3முறை 7வது மாடிக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததை கண்ட போலீசார் போலிசார் எச்சரித்து அனுப்பினர்.

News May 20, 2024

ஆம்பூர்: தேனி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

image

ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.  நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தார் மாமலை காட்டில் தேனீ எடுக்க சென்றார். அப்போது தேனி கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை நண்பர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

News May 20, 2024

ஆம்பூர் அருகே கிடந்த ஆண் சடலம்

image

ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் உள்ளது. இங்குள்ள ரயில்வே பாதையில் பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்வே இரும்பு பாதை அருகே ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாேலீசார் இறந்தவர் யார், கொலையா , தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!