India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் தாலுகா சின்னப்பள்ளி குப்பம் அடுத்த கரிகுட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளதால் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இன்று காலை 11மணி அளவில் கரிகுட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் இன்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜங்கலபுரம் , கல்நார்சம்பட்டி, பச்சூர், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்த ராதா, சுமதி, கலைவாணி, மற்றும் சின்னமணி ஆகிய நான்கு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 67 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்
ஜோலார்பேட்டை அடுத்த அண்ணாவட்டம் பகுதியைச் சார்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் 5 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல இன்று தனது மாட்டிற்கு மாட்டு தீவனம் கொடுத்தார். அதை சாப்பிட்ட 5 மாடுகள் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது. இது குறித்து ராஜேந்திரன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவர் போலி பத்திரம் வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்ற நிலையில் தற்போது வரை கடன் செலுத்தாததால் தனியார் வங்கி தணிக்கை துறை அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் போலி பத்திரம் மூலம் கடன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து தனியார் வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைதாகினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பத்தூர் மாவட்ட பிரிவின் கேலோ இந்தியா கால்பந்து மையத்தில் கால்பந்து பயிற்றுநர்களுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு தகுதியான கால்பந்து பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருகிற 28/05/’24 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு வரும் மே 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
வாணியம்பாடி அடுத்த மாந்தோப்பு பகுதியில் உள்ள ரவீந்திரன் குடும்பத்தினருக்கும், சர்மா குடும்பத்தினருக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவீந்திரன் மகன்கள் வினோத் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் புவியழகன் இன்று அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புவியழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை பதிவு செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் (அசல்) மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை (அசல்) கொண்டு செல்ல வேண்டும். 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் சார்பில் நடப்பாண்டுக்கான முதுநிலை, பி.எச்டி., மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு https://overseas.tribal.gov.in/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலகிரி மலை காப்புக்காட்டில் தற்போது கரடியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரடிகள் தண்ணீர் தேடி மலை அடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன. தற்போது மழை பெய்து வருகிறது . அதே நேரத்தில் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் வனத்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கரை வனப்பகுதியில் உள்ள மான்கள் நீர் தேடி சாலையை கடக்கும் போது அவ்வப்போது வாகன விபத்து ஏற்படுகிறது. இன்று கம்பனூர் வனப்பகுதி தென்கரையில் சாலையே கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயது மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.