India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.88 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக 81.50 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்
நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பழனி (32). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி காயத்திரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.பின்னர் சிறிது நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே மாப்பிள்ளை கோவில் தெரு மற்றும் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூரின், அர்மா மலைக்குகை, மலையம்பட்டு கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த இந்த குகையில் 8 ஆம் நூற்றாண்டு, சமண சமயத்தைச் சேர்ந்த ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சுதை ஓவியம் மற்றும் பதவண்ணம் ஆகிய தொழிற்நுட்பங்கள் கொண்டு இவை வரையப்பட்டுள்ளன. சுதை ஓவியம் என்பது சுவரில் சுண்ணாம்பு காரைப்பூச்சு பூசி, அந்த சாந்து காய்வதற்குள் வரையப்படும் ஓர் சுவர் ஓவிய தொழில் நுட்பமாகும்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் க. தர்ப்பகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார், இந்திய அரசு இணையதளமான http//awardsgov.in/ லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அதே இணையதன முகவரியில் உரிய ஆவணங்களுடன் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே பெங்களூரில் இருந்து குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று நள்ளிரவு சென்ற போது, திடீரென ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்த ஒயர் துண்டாகி விழுந்தது. இதனால், நடுவழியில் ரயில் நின்றது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், 7 ரயில்கள் தாமதமாக புறப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் யுகேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை 25% கட்டாய கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் இன்று காலை 10 மணி அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் பள்ளி நிர்வாகத்தின் முன்னிலையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இந்திய விமானப் படையின் அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கு இணைய வழியில் கடந்த 22 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 5 வரை ஆகும். 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த, திருமணமாகாத, இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார் https://agnipathivayu.cdac.in/ இதில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆம்பூர் தாலுகா சின்னப்பள்ளி குப்பம் அடுத்த கரிகுட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளதால் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இன்று காலை 11மணி அளவில் கரிகுட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் இன்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜங்கலபுரம் , கல்நார்சம்பட்டி, பச்சூர், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்த ராதா, சுமதி, கலைவாணி, மற்றும் சின்னமணி ஆகிய நான்கு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 67 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்
Sorry, no posts matched your criteria.