Tirupathur

News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் திமுக முன்னிலை

image

திருபத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தற்போதைய முன்னனி நிலவரம் வெளியாகியுள்ளது.
திமுக வேட்பாளர் 75036, அதிமுக வேட்பாளர் 47317,
பாஜக வேட்பாளர் 25829, நாத வேட்பாளர் 12905 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

திருப்பத்தூர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 3, 2024

கோஷ்டிமோதல் 5 பேர் மீது வழக்குப் பதிவு

image

ஜோலார்பேட்டை அருகே அண்ணாண்டப்பட்டியை  சேர்ந்தவர் கலாராணி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகிய இருவருக்கும் இடையே மின்விரோதம் இருந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் செங்கல் மற்றும் கையால் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலீசார் கலாராணி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News June 3, 2024

உலக சாதனைக்காக பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

image

வாணியம்பாடி, அம்பலூர் பகுதியைச் சேர்ந்த கலைக்குடில் பரதநாட்டியம் பயிற்சி குழு சார்பில் உலக சாதனைக்காக 800 மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு இன்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் வழங்கினார். இதில் கலைக்குடில் பரதநாட்டிய பயிற்சியாளர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News June 3, 2024

பத்ம விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் அசாதாரணமான பணிகளை ஆற்றியவர்களுக்கு 2025- ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பத்தை நிறைவு செய்து, அதன் நகலை 28.6.2024 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க. தர்பகராஜ் தெரிவித்துள்ளார்

News June 3, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பொழிந்த மழையளவு அதிகபட்சமாக ஆலங்காயம் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக திருப்பத்தூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்காயம் -22 மி.மீ, வடபுதுப்பட்டு – 22 மி.மீ, ஆம்பூர் -16 மி.மீ, நாட்றம்பள்ளி – 14.40 மி.மீ, வாணியம்பாடி – 6 மி.மீ
திருப்பத்தூர் – 3 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

ரயிலில் செல்போன் திருடிய நபர் கைது

image

பீகாரை சேர்ந்தவர் சுசில் (20). இவர் செலவுக்கு பணம் இல்லாததால் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்த போது அஜய் ராஜ் என்பவரின் செல்போனை திருடி சென்றுள்ளார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து நேற்று சுசிலை கைது செய்தனர். விசாரணையில் அவர் யூட்யூப் பார்த்து செல்போன் திருடியதாக அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 2, 2024

மக்கள் சட்ட உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் 02.06.2024 இன்று காலை 10 மணியளவில் மக்கள் சட்ட உரிமைகள் கழக கலந்தாய்வுக் கூட்டம் பொதுச் செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழக துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News June 2, 2024

நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமடைந்த பசுமாடு

image

ஆம்பூா், மிட்டாளம் ஊராட்சியை சோ்ந்தவா் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான மாடுகள் அருகில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தது. ராமமூா்த்தி என்பவரது நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. அங்கு சென்று பாா்த்தபோது சினைப்பசு தாடை கிழிந்து பலத்த காயம் அடைந்திருந்தது. நாட்டு வெடிகுண்டை உணவு என நினைத்து கடித்தபோது வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

News June 2, 2024

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

image

மாதனூர் அடுத்த தர்மகொண்ட ராஜா திருமலை திருக்கோயில்
வெங்கிலி மலைக்கு பின்புறம் உள்ள காடுகளில் மலையின் மீது அமைந்துள்ளது. அழகிய குளமும் அமைதியான சூழலும் இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.‌ நேற்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!