Tirupathur

News May 18, 2024

ஜோலார்பேட்டை : காதலியை மீட்க போராடும் காதலன்

image

ஜோலார்பேட்டை அருகே பாச்சலை சேர்ந்தவர் கெளதம். இவர், இன்று மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு தனது காதலியை பூட்டி வைத்து இருப்பதாக புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

News May 17, 2024

இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்

image

ஆம்பூர் தாலுகா பப்னபள்ளி கிராமத்தில் மொத்தம் 64 பேருக்கு சமுக சான்றிதழ் வழங்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி ஆட்சியர் தர்பகராஜ் இ.ஆ.ப அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் வசிக்கக்கூடிய இடத்திற்கே சென்று சாதி சான்றிதழை வழங்கினர்.

News May 17, 2024

திருப்பத்தூர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருப்பத்தூரில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

திருப்பத்தூர்: மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருப்பத்தூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

வாணியம்பாடி அரசு ஐடிஐயில் சேர விருப்பமா

image

வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் சாலை வேப்பமரச் சாலை பகுதியில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 10ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www. skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாகவும் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

News May 17, 2024

திருப்பத்தூர்: பெரிய ஏரியை தூர்வார கோரிக்கை

image

திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரிய ஏரி திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரிக்கு, பாச்சல் ஏரி, மாடப்பள்ளி ஏரி, அண்ணாண்டப்பட்டி ஏரி, புதுக்கோட்டை ஏரி என 4 ஏரிகளில் இருந்து உபரிநீர் சென்றடைகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

News May 17, 2024

திருப்பத்தூர்: வடமாநில இளைஞர் கைது

image

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பாதர் கெசு ரோட்டில் இன்று அதிகாலை வட மாநில இளைஞர்கள் 3 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது சீனு என்பவர் தங்கியுள்ள வீட்டின் சுவர் மீது ஏறி குதிக்கும் போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து தென்னை மரத்தில் கட்டி போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடினர். போலீசார் வடமாநில இளைஞரை கைது செய்தனர். 

News May 17, 2024

திருப்பத்தூர்: பொது மக்களுக்கு சுகாதாரக் கேடு

image

ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு புதூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் காவாய் இல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த புதூர் இரண்டாவது வார்டு படவேட்டம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் காவாய் ஏற்பாடு செய்து தர ஊர் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

News May 16, 2024

100.22 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 100‌.22 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

image

நாட்றம்பள்ளி அருக மடப்பள்ளம் பகுதியில் மேல்பட்டி பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இன்று கிராம பகுதிகளில் வேளாண்மை அனுப பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.ர் கல்லூரி முதல்வர் மணிகண்டன் ஆலோசனையின் படி பேராசிரியர் வைத்தீஸ்வரி தலைமையிலான குழுவினர் வேளாண்மை உயிர் உரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!