India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப் பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்த மத்திய ரிசர்வ் போலீசார் ஓடும் ரயிலில் மது அருந்திக்கொண்டு ரகளை செய்தனர். பயணிகள் ஜோலார்பேட்டையில் நின்றவுடன் ரகளை ஈடுபட்டவர் இறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட போலீசார் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.48 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக 73.58 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் (07.06.2024) இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து வாணியம்பாடி வந்த குடும்பத்தினர் ரயிலில் இறங்கி தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது எதிரே வந்த ரயில் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமம் சேர்ந்த கூலி தொழிலாளி மணி, மனைவி மலர். இவர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கு விழுப்புரம் பகுதி வணிக வரி துறை மூலம் வரி பணம் 22 கோடி, வட்டி 17 கோடி என மொத்தம் 39 கோடி வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்துள்ளதால் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில்
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஐந்தாம் சுற்றாக, கால் மற்றும் வாய் நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 10 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையினால் சாலையோரம் இருந்த புளியமரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நாகம்மன் கோவில் அருகே உள்ள வனத்துறை குடியிருப்பு பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது. தற்போது வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் சாய்ந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் தாலுகா கந்திலி காவல் நிலையத்தில் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீர் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது. பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் செல்வதாக, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.