India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின் படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி https://tntextiles. tn. gov. in/jobs/ இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஷ கம்பனி தொழிலாளர்கள் சம்பளம் போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 1,800 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று போராட்டம் நடத்தினர். வாணியம்பாடி சப் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
லத்தேரி காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 55 வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தொழில் பயிற்சி உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான தொழில் பயிற்சி உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு துறை சார்ந்த 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உடன் திட்ட முகமை இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் இருந்தனர்.
நாட்றம்பள்ளி தாலுகா கேத்தாண்டபட்டி சுகர் மில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் பள்ளிகொண்டாவில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மீது
திண்டுக்கல்லில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாேலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை வாங்கி பரிசீலனை செய்து தகுதியுள்ள கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இருந்தனர்.
திருப்பத்தூர் அரசு பெண்கள் மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ நல்லதம்பி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இதில், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர .
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பத்மாவதியின் வீட்டின் நேற்று பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் ரூ.4.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.