India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் நகரம் வார்டு 10 இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் திமுக நகர மன்ற உறுப்பினர் இம்தியாஸ் அஹமத் தலைமையில் ரிங் நோய் தடுப்பு சொட்டு மருந்து 50 குழந்தைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. மேலும் சொட்டு மருந்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வந்து போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் போதை பொருட்களான குட்கா பான் மசாலா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் விற்பனை தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி நரியனேரியை சேர்ந்தவர் ராமன் ( 30. இவர் சென்னையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையில் இவரது மனைவி சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலிசார் விசாரணையில் கணவர் ராமன் தனது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையெடுத்து போலீசார் ராமனை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சீனிவாசன். இவர் நேற்று தொலைபேசி வாயிலாக திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று இரண்டாம் நாள் ஜமாபந்தி நிகழ்வில் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்டத்தில் மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் தாலுகாவிற்குட்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்
ஜமாபந்தியில் சொத்து சார்ந்த பிரச்சனைக்கும் பிறவகை குறைகளுக்கும் மனு அளித்தாள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே ஜமாபந்தி நடைபெறும் வருவாய் கிராமங்களின் பட்டியல் தேதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வருவாய்
கிராமத்தில் வசிப்பவர்கள் அட்டவணையின் படி சென்று மனு அளிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம்
பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுகளை பெற்று வருகிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு ஆறு உள்வட்டங்கள் உள்ளது. தினமும் ஒவ்வொரு உள்வட்டத்தில் உட்பட்ட வருவாய்கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக அளிக்கலாம். அதன்படி இன்று(ஜூன் 13) திருப்பத்தூர் உள் வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்து தீர்வு காணலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.46 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த ஜெரினா என்ற பெண் ரயில் மோதி உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெரினாவின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.