Tirupathur

News June 27, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர்

image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் பயனடையலாம். இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரி சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28 அன்று அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வேளாண்மை துறை அலுவலர்கள் நேரில் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

image

திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News June 26, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இன்று காலை 9.10 மணியளவில் காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வளாகம் வரையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கதவாளம்‌ ஊராட்சியில் உதவி ஆசிரியரக பணியாற்றி வருபவர் மஞ்சுளா. இவர் இன்று காலை மாதனூர் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கதவாளம் அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்.

News June 25, 2024

ஆம்பூர்: ஒற்றை யானை நடமாட்டம் 

image

ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பனங்காட்டேரி மலை கிராமத்தில் டஸ்கர் என்னும் ஒற்றைக் காட்டு யானை தஞ்சமடைந்துள்ளது. இதனால்,  குடியிருப்பு பகுதி அல்லது மலை கிராம பகுதியில் ஒற்றைக் காட்டு யானை குறித்து நடமாட்டம் தெரிந்தால் 9786254998 என்ற தொலை பேசி எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு ஆம்பூர் வனசரக அலுவலர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

திருப்பத்தூர்: ஒரே நாளில் இத்தனை கோரிக்கை மனுக்களா?

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 24) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டம் முழுவதுமிலிருந்தும் பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News June 24, 2024

திருப்பத்தூர்: திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 400க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 24, 2024

ஜோலார்பேட்டை: பள்ளி மாணவர்கள் போராட்டம்

image

ஜோலார்பேட்டை அருகே கட்டேரி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொடக்க கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபின் மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்றனர்.

error: Content is protected !!