India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் சந்தன மரங்கள் காணப்பட்டாலும், தமிழ்நாட்டின் சந்தன மாநகராக திருப்பத்தூர் அறியப்படுகிறது.இங்குள்ள ஜவ்வாது மலைபகுதியில் அதிகளவில் சந்தன மரங்கள் காணப்படுகிறது.மேலும் ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய சந்தன கிடங்கும் இங்கு உள்ளது.இதனாலேயே திருப்பத்தூருக்கு சந்தன மாநகர் என்ற சிறப்பு பெயர் உள்ளது. திருப்பத்தூர் பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க..
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சினேகா பார்த்திபராஜா, ‘சாதி இல்லை-மதம் இல்லை’ சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். ஆம், இந்தியாவிலேயே தனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை என சட்டப்பூர்வமாக கடந்த 2019, பிப்ரவரி 5-ம் தேதி இந்த சான்றிதழை போராடி பெற்றார். சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் நடைமுறையில் ஆகப்பூர்வமாக கடைபிடிக்கும் இவரை பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (03-04-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டாம் என்றும் அதனால் விபத்துகள் ஏற்படுவதால் சாலை விதிகளை பின்பற்றுமாறு எச்சரித்து உள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாட்டில் பிரியாணிக்கென உள்ள தனித்துவமான ஸ்பாட்டுகளில் முக்கியமான ஊர் ஆம்பூர் பிரியாணி.தொடக்கத்தில் நவாப் படைவீரர்களுக்கு உணவளிக்க சமைக்கப்பட்ட பிரியாணி இன்று பலரின் விருப்ப உணவாக உள்ளது. ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும், சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்பட்டு சற்றே செம்மஞ்சளாக இருப்பது கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.ஷேர் பண்ணுங்க
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <
வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ என்ற காளையை வளர்த்து வந்தார். இந்த காளையானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்று, முதல் பரிசை பெற்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.