Tirupathur

News July 18, 2024

மாதனூரில் மக்களுடன் முதல்வர் பார்வையிட்டு வரும் ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று(ஜூலை 18) நடைபெற்று வருகிறது. இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்வில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

விழிப்புணர்வு குறும்படம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு

image

‘பெண்களுக்கு எதிரான இணையதள கிண்டல் – பழிவாங்கலுக்கு எதிரான விழிப்புணர்வு காணொளி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடக்கிறது. இதற்கு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோ எடுத்து adspcwctpt@gmail.com மின்னஞ்சலுக்கு 17ம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கூறப்பட்ட நிலையில் கால அளவு வரும் 22ம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

News July 17, 2024

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தலைமையில் காவல் நிலையங்களில் திருப்தி பெறாத 15 மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார்கள். உடன் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை காவல் ஆய்வாளர்கள் மற்றும் உள்ளனர்.

News July 17, 2024

திருப்பத்தூர்: கால அவகாசம் நீட்டிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு தலைப்பில் 4 நிமிடங்களுக்குள் தயாரித்து அனுப்ப கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் வருகிற 22ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் 

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இம்மாதம் வெள்ளிக்கிழமை(ஜூலை 19) காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரத்திற்கு தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில் <<>>வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

திருப்பத்தூர்: மாணவியர் விடுதியை திறந்து வைத்த ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியை அடுத்து புதூர் நாடு பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 200 பழங்குடி இன மாணவ மாணவியருக்கு நேற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில் மாணவியர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் உடன் இருந்தார்.

error: Content is protected !!