India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் தேமுதிக சார்பில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வு, ரேஷன் அத்தியாவசிய பொருட்கள் கடந்த சில தினங்களாக கிடைக்காததாலும் மற்றும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து மாவட்ட கழக அவைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கருத்து கேட்பு குழுவில் இருந்து பெறப்பட்ட 11 புகார் மனுதாரர்களை நேரில் அழைத்து மாவட்ட எஸ்பி விசாரணை செய்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக 41 புகார் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப்பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் வரும் 28ஆம் தேதி திருப்பத்தூர் டி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைப்பெற உள்ளது. மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாணியம்பாடி தாலுகா அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் அணைத்து அரசு துறை அலுவலகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான முதலமைச்சர் கேடயத்தை சென்னை தலைமை இயக்குநர் அலுவலகத்தில், காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்கள் வழங்க, திருப்பத்தூர் நகர காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பேபி(பொறுப்பு) பெற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் திருப்பத்தூர் நகர காவல் துறையினரிடம் வழங்கினார். மேலும் நகர காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருப்பத்தூரில் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் தலைமையில் மாற்றுக் கட்சியை சார்ந்த 200 மேற்பட்டோர் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், அவைத்தலைவர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ்குமார், சரஸ்வதி ஜெயக்குமார், மேனகா விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. மன அழுத்தத்தால் தற்கொலை போன்ற எண்ணம் ஏற்பட்டால் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு, தற்கொலை எண்ணத்தை தவிருங்கள். அழகான வாழ்க்கையை வாழுங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுரை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக கட்சி நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை இன்று திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சருமான கே சி வீரமணி திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.
திருப்பத்தூரை சேர்ந்த ஏகே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சியானது நேற்று மாவட்ட ஊரக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு 9 கருப்பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விளக்கினர்.
Sorry, no posts matched your criteria.