Tirupathur

News July 30, 2024

சைபர் மோசடிகளை தவிர்ப்போம் – மாவட்ட காவல்துறை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகளை (Prize winning Call) ஒரு போதும் உண்மை என நம்பி ஏமாறாதீர்கள் என கேட்டு கொண்டுள்ளது. மேலும் விழிப்புடன் இருப்போம், சைபர் மோசடிகளை தவிர்ப்போம் என பொது மக்களுக்கு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News July 30, 2024

மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சின்னவரிகம் ஊராட்சிக்குட்பட்ட பெங்களா மூலை பகுதியில் இரவு நேரங்களில் மண் திருட்டு நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 30, 2024

போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்

image

சென்னை கல்வித்துறை வளாகம் முன்பு பழைய பென்ஷன், இடம் மாறுதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர். இதையடுத்து ஆம்பூரில் இருந்து 12க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செல்ல இருந்ததை அறிந்த நகர காவல் துறை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆம்பூர் காது கேளாதோர் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

News July 30, 2024

போலீஸ் முகாம்களை எஸ்.பி திடீர் ஆய்வு

image

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா, வெலதிகமணிபெண்டா மலைகிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சுதல், விற்றல் ,மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க ஒரு எஸ்ஐ அடங்கிய 5 போலீஸ் குழு 24 மணி நேரமும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றன. நேற்ற அம்முகாமை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கள்ளச்சாராயம் , வெளி மாநில மது கடத்தலை தடுக்க அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய அறிவுறுத்தினார்.

News July 29, 2024

மருத்துவமனை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 5.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் பல்நோக்கு மருத்துவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், மேலும் பணி பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News July 29, 2024

7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

News July 29, 2024

211 மனுக்கள் விசாரணைக்கு உத்தரவு

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 211 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News July 29, 2024

5 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,000 மதிப்பிலான காதொலி கருவி மற்றும் 1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,000 மதிப்பிலான நவீன படிக்கும் கருவி என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News July 29, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மொபைல் App-ல் முதலீடு செய்வதன் மூலம் தினசரி பணம் கிடைக்கும் என் முகம் தெரியாத நபர்களிடம் UPI பேங்க் அக்கவுண்ட் எண் மூலம் பணம் செலுத்தி ஏமாந்து விடாதீர்கள். சிறு தொகையை கொடுத்து, பெருந்தொகையை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றிவிடுவர். மேலும் https://cybercrime.gov.in இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News July 29, 2024

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீது புகார் மனு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், அரசின் சலுகைகள் அனைத்தும் சிறிய பத்திரிகைகளில் பணியாற்றும் நிருபர்களுக்கு வழங்க மறுப்பதாக தெரிகிறது. இதுபற்றி கேட்டபோது ஆட்சியர் அலுவலகத்தில், நான் சொல்வதுதான் நடக்கும் என்று அதிகார தொணியில் மக்கள் தொடர்பு அலுவலர் பேசுவதாக நிருபர் ரஜினி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

error: Content is protected !!