India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றும் 36 வார்டு கவுன்சிலர்களுக்கு இன்று மர்மநபர் ஒருவர் கடிதம் மூலம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கவுன்சிலர்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த பெண் பிரசவத்திற்க்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மக்களே SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
திருப்பத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <திருப்பத்தூர் – 17,
வாணியம்பாடி – 08,
ஆம்பூர் – 01,
நாட்றம்பள்ளி – 06. செம்ம வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ஆம்பூரில் உணவுத் திருவிழா, மரபு விளையாட்டு திருவிழா, மரபு விதைத் திருவிழா வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 – இரவு 8 வரை ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இலவசம். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த week end-க்கு பிளான் ரெடி.
இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், புகார் இருந்தாலும் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உடனே அழைக்கலாம்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மாலை அணிவித்து திறந்து வைத்தார். உடன் செஞ்சிலுவை சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
திருப்பத்தூர், ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.