Tirupathur

News August 24, 2024

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1,514 பேருக்கு வேலை

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் 2023- 2024 ஆம் நிதியாண்டில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1,514 பேர் வேலை பெற்றுள்ளனர். மேலும், அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மூலம் 9 பேர் தேர்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அதோடு, வேலையற்றவர்களுக்கான உதவித்தொகை 1,713 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்தார்.

News August 24, 2024

திருப்பத்தூர் அருகே மாநில எல்லையில் தீவிர சோதனை 

image

வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள வெலித்திக்காமணிபென்டா பகுதிகளில் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றங்களை குறைக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 23, 2024

வாணியம்பாடி கொலையில் 20 பேர் மீது வழக்கு

image

வணியம்பாடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கார்த்திக், ஸ்ரீதர், ராஜ்குமார் ஆகிய 3 பேர் கைதான நிலையில், சம்பவத்தின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டதாக 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 23, 2024

புதூர் நாடு பகுதியில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் பலி

image

திருப்பத்தூர், புதூர் நாடு பகுதியை சேர்ந்த நவீன்குமார் டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று பர்கூரில் இருந்து எம் சாண்ட் பொருட்களை ஏற்றிக் கொண்டு புதூர் நாடு பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த காருக்கு வழிவிட லாரி டிரைவர் திடீரென பிரேக் போட முயன்றார். அதில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் எம் சாண்ட் மீது அமர்ந்து இருந்த அண்ணாமலை அடியில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக பலியானார்.

News August 23, 2024

திருப்பத்தூரில் சமூக நல ஆணையர் அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நல ஆணையர் அமுதவல்லி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர்; குழந்தை திருமணம் தொடர்பான வழக்குகளை கண்டறிந்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே முறையான பாலியல் ரீதியான கல்வி வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளம் வயதில் கப்பம் தரிப்பதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

News August 22, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க, திருத்தும் செய்ய, ஆதார் எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகள் வீடு வீடாக வந்து படிவங்களை பூர்த்தி செய்து செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்ட மக்கள் இதன் மூலம் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

பெத்தலேகம் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி

image

பெத்தலேகம் ஈபி லைன் வீதியில் ரபீக் அகமது என்பவர் வீட்டில் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு சிறப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சண்முகம் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்டனர்.

News August 22, 2024

வாணியம்பாடி இளைஞர் கொலையில் 3 பேர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் இளைஞர் கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜான், மற்றும் உடந்தையாக இருந்த ஸ்ரீதர், கார்த்திக் ஆகிய மூன்று பேரை வாணியம்பாடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏற்கனவே இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2024

வாணியம்பாடி அருகே கத்திகுத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

வாணியம்பாடி விஎஸ்கே காலனியில் நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. மேலும் கத்தி குத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வு மேற்கொண்டார்.

News August 21, 2024

மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்த ஆட்சியர்

image

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர் கணக்கு பாடம் வகுப்பு எடுத்தார். அப்போது மாணவர்கள் உற்சாகமாக பாடத்தை கவனித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!