India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா, புகையிலை விற்பனை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி அறிவுரை வழங்கினார். உடன் மாவட்டத் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் செந்தில் உடன் இருந்தனர்.
வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்க சாவடி வழியாக இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றி லாரி ஒன்று சென்றது. அதனை மடக்கி முன்னாள் இந்து மகாசபா நிர்வாகி ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், மணியரசு ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த அம்பலூர் காவல் துறையினர் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் <
ஜோலார்பேட்டை அருகே ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களிடம் கடந்த 19 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேர் தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை 10 பேர் தாக்கி பணத்தை பறித்து காரில் கடத்திச் சென்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில வாலிபர்கள் கொடுத்த புகாரில், ஏற்கனவே அரவிந்த் என்பவர் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர்.
திருப்பத்தூர் அருகே பெரிய கண்ணாலப்பட்டி பள்ளியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் படித்த தனுஷ், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபன் ராஜ், 2022-2023 கல்வி ஆண்டில் படித்த ஸ்ரீதர்ஷினி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 பேருக்கும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்ததுள்ளது. இவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் நேற்று(ஆக 24) சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பர பேனரில், குழந்தை தொழிலாளர்கள் என்பது ஒரு புதைகுழியாகும். குழந்தைகளின் எதிர்காலம் மூழ்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என மாவட்ட விழிப்புணர்வு பேனர் வெளியிட்டுள்ளது.மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றி தகவல் தெரிந்தால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் ஜீவிதா(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.