Tirupathur

News August 30, 2024

ஜோலார்பேட்டை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்

image

ஜோலார்பேட்டை பீடி தொழில் அதிபர் தியாகராஜன் கடத்தல் வழக்கில் 5 பேரை கைது செய்யப்பட்டனர். இதில் திடீர் திருப்பமாக கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அவரது மைத்துனர் அரவிந்தன் என்பதும், கைது செய்யப்பட்ட சந்தோஷ் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாகவும், ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் இருப்பதும் தெரியவந்துள்ளது.சொந்த மாமனை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News August 30, 2024

மின்னூர் ஊராட்சியில் ரூ.12 கோடியில் குடியிருப்புகள்

image

மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 243 குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து, புதிதாக 88 குடியிருப்பு கட்டுமான பணிகளுக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பயனாளிகளிடம் குடியிருப்புகளை ஒப்படைத்தனர்.

News August 29, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏரிகள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் செப். 7ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் கரைக்கும் ஏரி இடங்களை ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் ஆதியூர் ஏரி, நாட்டறம்பள்ளி கல்லுக்குட்டை ஏரி, ஆம்பூர் ஆணைமடுவு ஏரி, சான்றோர்குப்பம் ஏரி, ஜோலார்பேட்டை பொன்னேரி ஏரி, வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆகிய ஏரிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

News August 29, 2024

கந்திலி அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது

image

ஜோலார்பேட்டை பீடி தொழில் அதிபர் தியாகராஜன் என்பவரை கடந்த 23 ஆம் தேதி மர்ம கும்பல் கத்தி முனையில் கடத்தி ரூபாய் 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கில் கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு தொழில் அதிபரை கடத்திய அரவிந்தன், அரி, விஷ்வா, அஜித்குமார், சந்தோஷ், வீரமணி கண்டன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 29, 2024

புதூர் நாடு விபத்து; ஆட்சியர் மற்றும் எஸ்பி நேரில் சந்திப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு மலை பகுதியில் மினி லாரி கவிழ்ந்து விபத்தில் 31 பேர் காயம் அடைந்த நிலையில் 26 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் சந்தித்தனர். மேலும், உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.

News August 28, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில் வாராந்திர புதன்தின குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்து விசாரணையில் திருப்தி அடையாத 9 புகார்தாரர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 50 புதிய புகார் மனுக்களையும் மாவட்ட எஸ்பி பெற்றுக்கொண்டார்.

News August 28, 2024

வாணியம்பாடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

image

கோவாவில் உலக அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் வாணியம்பாடி அடுத்த சின்னபள்ளிகுப்பம் மற்றும் மலையம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இலங்கை அகதி முகாம்களில் உள்ள மாணவிகள் 25 பேரும் கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 25 பேரும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பலர் தங்கள் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 28, 2024

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் தூய்மை பணி

image

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள பெரிய ஏரி பகுதியில் நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி பணியாளர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

News August 28, 2024

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

image

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளையும் காவல் நிலையத்தில் சுற்றுப்பகுதிகளின் சுகாதாரத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 27, 2024

திருப்பத்தூரில் 100 மரக்கன்று நடும் நிகழ்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ஏரி கரை பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு அவர்கள் தலைமையில் இன்று 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!