India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஜய் என்ற இளைஞரை பட்டப் பகலில் கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளிகளான புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த அருள்மொழி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை திம்மாம்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 26 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்கள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திம்மாம்பட்டையில் பணியாற்றிய குமரேசன் ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கும், ஆத்தூர் குப்பத்தில் பணியாற்றிய கோகிலா கே பண்டாரபள்ளிக்கும், நல்லகுண்டாவில் பணியாற்றிய சீனிவாசன் திம்மாம்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், போக்குவரத்து விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் ‘சாலையில் வாகனங்கள் பழுதாகி நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்’ என்று விழிப்புணர்வு பேனர் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 13 மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ஏழு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.
திருப்பத்தூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் 2 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவது குறித்து ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் விவாதித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தர்பக ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் பள்ளி மேலாண்மை குழு சார்பில் 794 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் 469 தீர்மானங்கள் தற்போது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள 325 தீர்மானங்கள் துரை ரீதியாக நிறைவேற்றப்படும் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் விஜி என்ற இளைஞரை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதத்தை வைத்து தாக்கியதில் ரத்த காயத்துடன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே 1090, மற்றும் 181 என்ற இலவச உதவி எண்களை அழையுங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(செப்.05) இரவு 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை தெரிவிக்கவும்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி சந்துரு, மணிகண்டன் 4வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த 9 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் 2 ரயில்வே போலீசாரும் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 போலீசாரையும் இன்று பணியிடை நீக்கம் செய்து ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.