India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரெட்டிவலசை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி கர்பமாகியுள்ளார். இதனையடுத்து நேற்று ஆலங்காயம் அரச ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலிசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 31, 1, 2 ஆகிய 3 நாட்களில் வாணியம்பாடி உழவர் சந்தையில் 1,084 டன் காய்கறிகளும், 155 டன் பழங்ளும், திருப்பத்தூரில் 474 டன் காய்கறிகளும், 101 டன் பழங்களும், நாட்டறம்பள்ளியில் 410 டன் காய்கறிகளும், 18 டன் பழங்கள் என மொத்தமாக ரூ.10 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், இவரது உறவினர் ஆம்பூரை சேர்ந்த முருகன் வீட்டில் கடந்த 24ம் தேதி சென்டரிங் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது முருகன் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் மரக்கட்டையால் மணிகண்டனை தாக்கியதால் அவர் உயிரிழந்தார். அவரது உடலை பொன்னேரி சாலையோர ஏரிக்கரை அருகே வீசி சென்றுள்ளனர். போலீசார் இன்று உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர் சேர்ந்த கோடீஸ்வரன் தனது நண்பர் மணிகண்டன் என்பவருக்கு ரூ 2 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். பணத்தை நேற்று முன்தினம் இரவு திருப்பி கேட்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் டெல்லி பாபு, வசந்த், நவீன், ஆகிய 4 பேருடன் கோடீஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். எனவே ஜோலார்பேட்டை போலீசார் மணிகண்டன் உள்பட 4 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் ஆம்பூர் தாலுகா டவுன், வாணியம்பாடி தாலுகா டவுன், திருப்பத்தூர் தாலுகா டவுன், கந்திலி, உமராபாத், நாட்றம்பள்ளி ஆலங்காயம் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டம் ஓழுக்கு படுத்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம் 2.11.24 மற்றும் 3.11.24 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள், ஆதார் கார்டு அப்டேட் செய்ய, செல் நம்பர் இணைக்க, புகைப்படம் மாற்ற திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு வருகை தரவும்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிமுகமில்லாத எண்களிலிருந்துவரும் போன் கால் மற்றும் வீடியோ கால் மோசடிகளில் சிக்காதீர்கள். மேலும் மிரட்டல்களுக்கு ஆளாகாதீர்கள் என்று பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.
தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் ஒரே நாளில் 6.75 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ரூ.5.37 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி முடிந்த நிலையில் மக்கள் சொந்த ஊர் திரும்ப நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இன்று (2-11-24) முதல் (4-11-2024) வரை வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர் திரும்ப அலுவலக வேலை மற்றும் சொந்த ஊர் திரும்ப முன்கூட்டியே பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.