India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 14) திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நாளை (ஜன.15) முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதன் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக 17ஆம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ஆம் தேதி சென்னைக்கு செல்ல விறுவிறுப்புடன் முன்பதிவு நடந்து முடிந்துள்ளது.
நெல்லையில் 2024ல் தொழிலாளர் நலத்துறைஆய்வு மேற்கொண்டதில் தமிழில் பெயர்ப்பலகை முறையாக வைக்காத 91 கடைகள் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இதுவரைஅபராதமாக ரூ.75,500 விதிக்கப்பட்டுள்ளது. பெயர்ப்பலகை நிறுவனங்கள்மற்றும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 26 கடைகள் நிறுவனங்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் தொழிலாளர் நல உதவி ஆணையர் குழுவினர் தமிழில் பெயர் பலகை அமைக்கப்படாத கடைகள், வணிக நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது விதி மீறிய 84 நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 26 கடைகள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் -திருச்சி பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதையொட்டி தென் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் இருந்து வரும் 25ஆம் தேதி அன்று புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில், நாகர்கோவில் இருந்து வரும் 28ஆம் தேதி புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை ரயில் மதுரை திண்டுக்கல் வழியே இயக்கப்படாது என நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு 37 இடங்களில் வாகன தணிக்கை செய்தும், 6 தற்காலிக வாகன சோதனை சாவடிகள் அமைத்தும், 66 இரு மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்துகள் செய்து அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும், 1375 காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்தார்.
காவல்கிணறு மகேந்திரகிரியில் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வள்ளியூரில் நேற்று ராபர்ட் புரூஸ் எம்பி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை பகுதியான கூடங்குளம், இடிந்த கரை, திசையன்விளை ஆலந்தலை திருச்செந்தூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும்” என மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார்.
நெல்லையில் இன்று ஜனவரி 13 நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு:
காலை 9 மணிக்கு மேல நத்தம் அக்னிஸ்வரர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் வீதி உலா நடக்கிறது. காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெறுகிறது. நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் காலை 10 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஜன.15) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.* உங்கள் மீனவ நண்பர்களுக்கு பகிர்ந்து எச்சரிக்கை விடுங்கள்*
தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பள்ளியின் பின்புறம் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு மோட்டார் நிறுவனத்தில் மூமமூடி அணிந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.2 லட்சத்து 88 ஆயிரம்,3 தங்க நகைகளை கொள்ளயடித்து சென்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.