Tirunelveli

News August 15, 2025

நெல்லை : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நெல்லை மாவட்ட மக்கள் 0462-2580908 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 15, 2025

பாளையில் விபத்து ; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

image

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும் அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News August 15, 2025

நெல்லை மக்களே சுதந்திர தின உறுதிமொழி!

image

நெல்லை மக்களே! இன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை போற்றும் விதமாக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல், புது வாக்காளராக சேரும் பணிகளை செய்வோமா? பழைய வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து பாருங்க… புது வாக்காளர்க்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிங்க… 944123456 என்ற எண்ணில் Whatsapp-ல் புகார் அளியுங்க. ஜனநாயக கடமையாற்றுவோம்..Share பண்ணுங்க….!

News August 15, 2025

நெல்லையை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விருது

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார், நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோர் நாங்குநேரி பகுதியில் இளைஞர்கள் திறன் மேம்பாடு, சமூக மாற்றத்திற்கு பணியாற்றியதற்காக இந்த ஆண்டின் தமிழக அரசின் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News August 14, 2025

நெல்லை: பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை

image

கன்னியாகுமரியைச் சேர்ந்த தலைமை காவலர் சசிகுமார்(45), பாளையில் 15 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார். மாணவி பள்ளியில் “குட் டச், பேட் டச்” வகுப்பில் இது குறித்த உண்மையை வெளிப்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒன்ஸ்டாப் சென்டருக்கு தகவல் சென்று, புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

News August 14, 2025

நெல்லை: நிதி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விலைப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்து சந்தை அணுகுதலை எளிதாக்குதல் & விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிப்பு. *ஷேர்

News August 14, 2025

நெல்லையில் அரசு வேலை வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறையில் 37 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 16-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News August 14, 2025

தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில் நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். எனவே தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னை டூ நெல்லைக்கும் நெல்லை டூ சென்னைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கு வழக்கமாக அதிகபட்சம் ரூ.1500 டிக்கெட் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

News August 14, 2025

நெல்லை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

image

நெல்லை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <>க்ளிக்<<>> செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

News August 14, 2025

நெல்லை மக்களே விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

image

நெல்லையில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம நெல்லை மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!

error: Content is protected !!