India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை ஊத்து பகுதியில் 151 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கு பகுதியில் 137 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 106 மில்லி மீட்டர் மழையும், காக்காச்சியில் 120 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நேற்று(ஜன.18) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024ம் ஆண்டு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது 3,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் பலி எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜன.18) வெளியிட்ட அறிக்கையில், 400 ஆண்டுகள் பழமையான திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழிபாட்டுக்கு தமிழக அரசு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்துள்ள ஸ்டாலின் அரசு இந்த விவகாரத்தில் சிறுபான்மை மக்களின் உரிமையை பறிப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே இளைஞர் சேதுபதி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், சேதுபதியை கொலை செய்த வெனிஸ் குமார், அவரது நண்பர்கள் வினோத், மனோஜ் ஆகிய 3 பேரை நேற்று(ஜன.18) கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக சேதுபதி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
#இன்று(ஜன.19) காலை 10 மணிக்கு மேலப்பாளையம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் உங்கள் நண்பன் மாத இதழின் சார்பில் சாதனையாளர்கள் கௌரவிக்கும் விழா நடக்கிறது. #பிற்பகல் 3 மணிக்கு பாஜக மாவட்ட புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நேற்று முன்தினம்(ஜன.17) நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று(ஜன.18) தனது ‘X’ தள பதிவில் கூறியிருப்பதாவது, “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டதுபோல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.18) வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு எதிர்பார்க்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் நெல்லையில் வானிலை காலை முதல் மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் நெல்லை மக்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தனர். தற்போது மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. வழக்கமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.800 உள்ள நிலையில் இன்று ஒரு டிக்கெட் விலை ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டது. நாளை சென்னைக்கு செல்ல டிக்கெட் விலை ரூ.4,000 வரை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நேற்று(ஜன.17) வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ‘தரமான காற்று முதலிடம்’ என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் பாதுகாக்க வேண்டும். சொந்த வாகனத்தை குறைவாக ஓட்டுங்கள், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துங்கள். வாகனத்தை அடிக்கடி பராமரித்து மாசு கட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
2024-25 ஆம் ஆண்டிற்கான 60 வயதை கடந்தவர்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் நெல்லையை சேர்ந்த தேவதாஸ் ஆபிரகாம் 2ஆம் இடம் பிடித்தார். இரட்டை பிரிவில் நெல்லையை சேர்ந்த தேவதாஸ் ஆபிரகாம், திருப்பூர் சேர்ந்த நியமத்துல்லாஹ் இருவரும் முதலிடம் பிடித்து கோவாவில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். இவரை நெல்லை மக்கள் பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.