Tirunelveli

News February 17, 2025

கருமேனியாற்று ஓடையில் மணல் திருடியவர் கைது

image

பரப்பாடி அருகே கழுவூர் பகுதியில் கருமேனியாற்று ஓடையில் மினி லாரியில் சென்று கணேசன் மகன் நாஞ்சில் சுந்தர் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டதாக வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். எஸ்ஐ உதய லட்சுமி மற்றும் போலீசார் தூத்துக்குடியில் வைத்து அவரை நேற்று கைது செய்தனர். நாஞ்சில் சுந்தர் மீது நாங்குநேரியில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

காங்கிரஸ் பிரமுகரிடம் சிபிசிஐடி விசாரணை

image

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரின் மரண வழக்கு தொடர்பாக திருநெல்வேலி சிபிசிஐடி அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகர் குட்டம் சிவாஜி முத்துக்குமாரிடம் இரண்டரை மணி நேரம் நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தனக்குத் தெரிந்த உண்மையான தகவல்களை கூறியுள்ளதாக சிவாஜி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையை சேர்ந்த தந்தை மகன் பலி

image

டவுனை சேர்ந்தவர் மாதவன் -55 இவரது மகன் கிருஷ்ணசங்கர் -22 மாதவன் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிருஷ்ணசங்கர் விடுமுறைக்காக துபாய்க்கு சென்றார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கினார். அதில் அவர் குளிக்கும் போது மூழ்கி இறந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற அவரது தந்தையும் நீரில் மூழ்கி இறந்தார். இன்று (பிப்.16) காலை அவர்களது உடல் நெல்லைக்கு வந்தது.

News February 16, 2025

முன்னாள் அமைச்சர் மைதீன் கானுக்கு வேறு பொறுப்பு 

image

நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்.16) அறிவித்துள்ளார்.

News February 16, 2025

பகுதி நேர வேலை வாங்கி தருவதாக மோசடி

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்யும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் .ஆசை வார்த்தை கூறி சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

News February 16, 2025

கொடைக்கானலில் பதுங்கிய 2 நெல்லை ரவுடிகள் கைது

image

முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த செல்வகுமரேசன் என்ற தலைமை காவலரின் வீட்டில் கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3பேரை நெல்லை போலீசார் கொடைக்கானலில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற போது மூவருக்கும் கைகளில் முறிவு ஏற்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் நேற்று (பிப்.15) நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

News February 15, 2025

நெல்லையில் காங். கூட்டத்தில்  ப.சிதம்பரம் பேச்சு

image

அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்தவர் அம்பேத்கர் காந்திக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. காந்தியத்தையே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். அம்பேத்கரை அழித்து விடுவார்கள். இன்று நாம் சொல்கிறோம், நம்மோடு பல தோழமைக் கட்சிகளும் சொல்கிறார்கள். என ப.சிதம்பரம் பேசினார். MLA ரூபி மனோகரன், தங்கபாலு, செல்வபெருந்தகை MLA ,எம்பி.ராபர்ட் புருஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 15, 2025

பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வாழைத்தோட்டம் மெயின் ரோட்டில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்வத்தில் சாத்தான்குளம் தனியார் கல்லூரி முதல்வர் உட்பட இருவர் பலியாயினர். மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 15, 2025

நெல்லை விஸ்வாமித்திரர் ஸ்தல வரலாறு தெரியுமா?

image

இந்தியாவிலேயே விஸ்வாமித்திரருக்கு என்று கோயில் நெல்லையின் கடைக்கோடி கிராமமான விஜயாபதியில் அமைந்துள்ளது. இழந்த தன் தவ பலன்களை மீண்டும் பெற விஸ்வாமித்திரர் யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் விஜயாபதி. விசுவாமித்திரரின் நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்களின் சாபம் நீங்குவதாக கூறப்படுகிறது. SHARE IT

News February 15, 2025

335 கிராமங்களில் பதிவு செய்யும் முகாம் – ஆட்சியர் தகவல்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 335 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெயர் பதிவேடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் நில உடமை பதிவுகள் சரி பார்த்துக் கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற இயலும். விவசாயிகள் இதில் பதிவு செய்வது அவசியம் என்றார்.

error: Content is protected !!