India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீர் தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக இன்று (ஜூன் 5) காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். பாபநாசம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்று வெற்றி சான்றிதழை பெறுவதற்காக செல்லும் முன் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் மேயர், துணை மேயர், வாரிய தலைவர், மத்திய மாவட்ட பொறுப்பாளர், ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (ஜூன் 4) வருகை தந்தனர். ஆனால் இவர்களை மாவட்ட ஆட்சியர் உள்ளே வருவதற்க அனுமதிக்கவில்லை. இதனால் இவர்கள் வெளியே நின்றனர்.

திருநெல்வேலி மக்களவை தேர்தலில் நான்கு பிரதான கட்சிகள் தவிர 19 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் 4 பிரதான கட்சிகளை அடுத்து பொட்டல் சுந்தர முனீஸ்வரர் என்ற சுயேச்சை வேட்பாளர் 19,852 வாக்குகளை பெற்று 5ஆம் இடத்திற்கு வந்தார். 6வது இடத்திற்கு நோட்டா வந்தது. 7,396 பேர் நோட்டாவிற்கு வாக்களித்தனர். 1788 வாக்குகள் தள்ளுபடி ஆகின.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே நோட்டு, புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 380 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஜூன் 10ஆம் தேதி அதனை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 23 பேர் போட்டியிட்ட நிலையில் 19 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இவர்களில் ராகவன் என்ற சுயேச்சை வேட்பாளர்தான் குறைந்தபட்ச வாக்குகளை பெற்றுள்ளார். இவருக்கு 366 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. மொத்தம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 236 வாக்குகள் பதிவான நிலையில் இவர் மிக குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார்.

நெல்லை நாடாளுமன்ற திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மொத்தமாக 5,02 ,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது .தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விட 1, 65, 620 வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிபெற்றதை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார்.

நெல்லை தொகுதி வாக்கு எண்ணிக்கை பாளை அரசு பொறியாளர் கல்லூரியில் நடைபெற்றது. 23 சுற்றுகள் முடிந்த நிலையில் தபால் வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்டு இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 5, 22, 96வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் 3,50,000 வாக்குகள் பெற்றுள்ளார் என கலெக்டர் தெரிவித்தார்.

நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்போது மாலை நேரத்தில் வாக்கு என்னும் மையம் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணும் பணியானது தாமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் கொளுத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 4) காலை முதல் வானிலை மந்தமாக காணப்பட்ட நிலையில் இன்று மாலை மழை வருவது போல் மேகமூட்டமாக வானிலை காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் நவாஸ் கனிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் நயினார் முஹம்மது கடாபி இன்று (ஜூன் 4) சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.