India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பேட்டை செந்தில் நகர் அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவன் ஹரிஷ். நேற்று மாலை தனது நண்பர்கள் இருவருடன் பைக்கில் தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார். அந்த பைக்கும், எதிரில் வந்த பைக்கும், மோதியதில் ஹரிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் பேராசிரியர், தமிழறிஞர், எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்களை சிறப்பு செய்யும் வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் மரியா கேண்டீன் வரை அவர் பயின்ற பள்ளி கல்லூரி அமைந்துள்ள ஒரு கிலோமீட்டர் நெடுஞ்சாலைக்கு பேராசிரியர் தொ.பரமசிவன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெற்று திருநெல்வேலி மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு பிசி, எம்பிசி, மற்றும் சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை பயில கல்வி கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்படிவம் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வைத்து நாளை (அக்.11) காலை 10 மணிக்கு வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு வகுப்பு நடைபெற உள்ளது. இதில் தீயணைப்புத் துறையின் பணிகள் குறித்த விபரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொள்ள தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் மழைக்கால மின் விபத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (அக்டோபர் 10) விடுத்துள்ள செய்தி குறிப்பில் மின் மாற்றிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த நீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துச்செல்வன்(34), கோவில்பட்டியில் தகராறில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், கழிவறை செல்வதாக கூறி தப்பினார். பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். நெல்லையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவில்பட்டி போலீசாரும் தேடுதல் நடத்துகின்றனர்.

தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் இசக்கி செல்வம்(51). இவர் நெல்லையிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்ற போது மாற்றுத்திறனாளி டிக்கெட் ரூ.40க்கு பதில் ரூ.50யாக நடத்துனர் வாங்கியதுடன் பஸ் நிலையம் வெளியே இறக்கி விட்டார். இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் தொடர்ந்து வழக்கை நெல்லை நுகர்வோர் ஆணையம் நேற்று விசாரித்து இசக்கி செல்வதற்கு ரூ.17,010 அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டத்தில் அக்.12ம் தேதி 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 964 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் வைத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை மறுநாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *ஷேர்

நெல்லை, திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி. கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி, சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து.
Sorry, no posts matched your criteria.