Tirunelveli

News March 18, 2025

நெல்லையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் நனைத்து கொண்டிருந்த போது வேலாயுதம் (30), ரவி (37) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 18, 2025

கொலை செய்யப்பட்ட முத்தவல்லி குறித்து வெளியான தகவல்

image

நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் முன்னாள் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

குருவாயூர் விரைவு பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை வழியாக குருவாயூர் – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 28ஆம் தேதி பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி அன்றைய தினம் இந்த ரயில் சென்னையில் இருந்து 28ஆம் தேதி புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து குருவாயூர் வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து நெல்லைக்கு புறப்படும்.

News March 18, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் -ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டங்கில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News March 18, 2025

நெல்லை:  இரவு ரோந்துபணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி ஊரகப்பகுதி, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உட்கோட்டங்களில், ரோந்து பணிகள் மேறிகொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தாழையூத்து, களக்காடு, வள்ளியூர், வீரவல்லூர் காவல் ஆய்வாளர்களும், கல்லிடைக்குறிச்சி உதவி காவல் ஆய்வாளர்களும் ஈடுபடுகின்றனர்.

News March 17, 2025

பாளையங்கோட்டை சிறை கைதி – திடீர் மரணம்

image

மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கவுது இப்ராகிம் (வயது 59). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2025

தாமிரபரணி ஆற்றில் குளித்தால் ஆபத்து

image

நெல்லையில் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை நீர் கலப்பது, விவசாய உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என பல்வேறு காரணங்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுகிறது. ஆய்வில் ஹெவி மெட்டல்ஸ் என்று அழைக்கப்படும் உலோகங்கள் ஆர்சனியம், நிக்கல், குரோமியம், காட்மியம், நைட்ரேட்ஸ் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது காரணமாக அமைகிறது என மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். SHARE IT

News March 17, 2025

மதுரை ரயில் நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்கப்படுமா?

image

நெல்லை எம்.பியாக கடந்த முறை ஞானதிரவியம் இருந்தபோது மும்பை குர்லாவில் இருந்து புறப்படும் எல்.டி.டி- மதுரை ( வ.எண்.22101) வாராந்திர ரயிலை நெல்லை வழியாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை களையும் விதமாக விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நெல்லையில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!