Tirunelveli

News October 25, 2024

நெல்லையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.,25) காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரிக்கேசவநல்லூர், இலுப்பைக்குறிச்சி, மேல்புதுக்குடி, சிங்கிகுளம், கீழ்காடுவெட்டி, கோடீஸ்வரன்நகர், மலையாளமேடு பகுதிகளில் இம்முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

News October 25, 2024

நெல்லையில் ஆளுநர் பங்கேற்கும் விழா நேரடி ஒளிபரப்பு

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை(26 ஆம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இணையதள முகவரியை பல்கலைக்கழகம் இன்று(அக்.,25) வெளியிட்டுள்ளது.

News October 25, 2024

நெல்லை மின்வாரியத்தினர் முக்கிய வேண்டுகோள்

image

நெல்லை மின்வாரியத்தினர் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சூறைக்காற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள், அருகிலேயோ அல்லது கீழேயோ நிற்க வேண்டாம். இல்லங்களிலும், அலுவலங்களிலும், மின் பாதுகாப்பு சாதனம்(RCD) அமைத்து நமது குடும்ப உறவுகளின் உயிர்களை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளனர்.

News October 25, 2024

பயிர் காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாள்: நெல்லை கலெக்டர்

image

இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. இதில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் நவ.,15 ஆகும். அதற்குள் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கேட்டுக்கொண்டார்.

News October 25, 2024

பயிர் காப்பீடு திட்டம் தொடர்பு எண்கள் அறிவிப்பு

image

நெல்லை விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 14447 தொடர்பு கொள்ளலாம். விரிவான விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இது குறித்தான விபரங்களுக்கு மாவட்ட அளவில் 0462-2572514 (அ) வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு சந்திரபோசை (9500982980) அணுகலாம் என கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.24) தெரிவித்தார்.

News October 25, 2024

நெல்லையில் கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

image

5 ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவில் கால்நடைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று (அக்.25) தொடங்க உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 188 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 41 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 25, 2024

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு திட்டம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; நெல் பயிரானது வருவாய் கிராம அளவிலும் மற்ற பயிர்கள் அனைத்தும் குறுவட்ட அளவிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தங்களது பகுதி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதா என்பதனை விவசாயிகள் உழவன் செயலியினை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கம்

image

சர்வதேச பருவநிலை மாற்ற தாக்கம் குறித்த விழிப்புணர்வு நாளை முன்னிட்டு இன்று (அக்.25) ராதாபுரம் விஜயாபதி கிராமத்தில் மீன்வளப் பூங்கா எனும் அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கப்படுகிறது. அனைத்து கடற்கரை கிராமங்களிலும் பனை விதைகள் நடவு செய்யப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.24) தெரிவித்தார்.

News October 24, 2024

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் – ஆட்சியர்

image

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைப்பதற்கு வசதியாக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

எச்சரிக்கையாக இருக்க மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடை தெருக்களில், கூட்ட நெரிசல்களில் செல்லும்பொழுது பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கூட்டம் மிகுந்த பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி நெல்லை மாவட்ட காவல்துறை இன்று (அக்.24) கேட்டுக் கொண்டது.