Tirunelveli

News March 14, 2025

புதிய நகர் நல மையங்களில் பணியாற்ற வாய்ப்பு

image

நெல்லை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகர் நல மையங்களில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மெடிக்கல் ஆபீஸர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பத்தை tirunelveli.nic.in  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மார்ச்.24 க்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

News March 14, 2025

நெல்லை: வாதாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த வழக்கறிஞர் 

image

நெல்லை தச்சநல்லூர் மேலகரையை சேர்ந்தவர் தங்கராஜ் (40)வக்கீலான இவர் நேற்று வழக்கு ஒன்றில் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருந்தார் .திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 14, 2025

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் ரத்து

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையே மார்ச் 20 முதல் 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் எண் 5004, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் எண் 5003 ஆகிய 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்வதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 14, 2025

நான் முதல்வன் திட்டத்தில் இலவச ஓட்டுனர் பயிற்சி

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சாலை போக்குவரத்து நிறுவனம் தமிழ்நாடு அரசு மேம்பாட்டு கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in.skill வெப்சைட்டில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 14, 2025

தமிழக பட்ஜெட்டில் நெல்லையின் அறிவிப்பு

image

▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.

News March 14, 2025

நெல்லையில் ரூ.400 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

image

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார், அதில் காவிரி, வைகை, நொய்யல், தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்கும் பொடுட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட நதிக்கரை மேம்பாட்டு பணிகள் நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

ஏப்.1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கல்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் திருவள்ளுவன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியத்துடன் ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் சேர்த்து ஏப்ரல் 1முதல் வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News March 14, 2025

நெல்லையில் 22 மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது

image

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது வழங்கி வருகிறது. 2024-25 கல்வியாண்டில் விருது பெற தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1197 மாணவ, மாணவிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 22 மாணவ, மாணவிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சிஇஓ சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பணகுடி கோயில் ஓதுவார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

பணகுடி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயிலில் ஓதுவார் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார், செயல் அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் மார்ச்.1 அன்று 18 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை ஏப்.1 மாலை 5:45 மணிக்குள் கோயில் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வக்கீல் கைது

image

சேரன்மாதேவியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சேரன்மகாதேவியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய வழக்கறிஞர் ராஜா ராம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!