India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் அக்.17,18,20ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து விபரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் சாமுவேல் ராஜ் (37) மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தகவலை மாவட்ட எஸ்.பி அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத்துறைகளில் பரிசுப் பொருட்கள் மற்றும் வசூல் வேட்டை தவிர்க்க மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசு துறைகளை கண்காணித்து சோதனை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த நபரின் உடலை மீட்டு பாலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு

இன்று அக்டோபர் 14 காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியின் 21 மில்லிமிட்டர் மழை பெய்தது. அம்பாசமுத்திரம் 8 மில்லி மீட்டர் பாளையங்கோட்டை 7 மில்லி மீட்டர், மணிமுத்தாறு, நாங்குநேரி தலா 2 மில்லி மீட்டர், நெல்லை 3. 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.