India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (அக்.30) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராகவும் முன்னாள் எம்பி வசந்தி முருகேசனை நியமித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 13 லட்சத்து 86 ஆயிரத்து 44 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு முகாம்கள் மூலம் 21,809 வாக்காளர்கள் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 4 பேரை விசாரணை செய்தனர். அதில் டீக்கடை தொழிலாளியிடம் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் நேற்று(அக்.28) கைது செய்தனர், அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரைப்பட வர்த்தக குடும்பம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணை நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வாழை படத்தில் நடித்த நடிகர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நேற்று (அக்.28) நடைபெற்றது. திரைப்பட வர்த்தக பிரிவு கலைக் குடும்ப நல சங்க மாநில பொருளாளர் ரகுமான் ஷா தலைமை தாங்கினார். பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி பரிசுகள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்.28) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் வழியில் நாங்குநேரி ஏர்வாடிக்கு வருகை தந்த திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அங்குள்ள சாலையோர டீ கடையில் மக்களோடு மக்களாக நின்று தேநீர் அருந்தி விட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
நெல்லையில் தீபாவளியை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என சுமார் 1400 பேர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 34 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் 43 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். 54 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படும் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை புறநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் கூட்டம் காணப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து அதிகாரிகள் காவலர்கள் பெயர் விபரங்கள் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இன்று (அக்.28) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்டவைகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு அட்டவணையில் உள்ள காவலர்களை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.