India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,490 வாக்குச்சாவடிகள் உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகள் உள்ளன. நெல்லை 311, நாங்குநேரி 306, அம்பை 294, பாளையங்கோட்டை 270 வாக்குச்சாவடிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொழிலாளர் உதவியாளர் முருகப் பிரசன்னா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக். மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் & பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பட்டாசு கடைகள் உட்பட அனைத்து கடைகள் 74 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 43 நிறுவனங்கள் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.30) நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம் வருமாறு: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா ஊஞ்சல் விழா ஊஞ்சல் மண்டபத்தில் இன்று இரவு 6 மணிக்கு நடக்கிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் அமைப்பினர் காலை 9 மணி முதல் மாலை அணிவிக்கின்றனர். கீழ சேவல் சமுதாய நலக்கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம் நடக்கிறது.
நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று விடுத்துள்ள வானிலைப் பதிவின் விபரம்: “ நாளை தீபாவளி அன்று தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பதிவுக்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் 1ம் தேதிக்கு பின்னர் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று வீசும். இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் குறிப்பாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வலுப்பெற வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் நேற்று அவரது வீட்டின் பின்புறம் கீழே கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது அண்ணன் முருகன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு நெல்லை வழியாக இரவு 9.55க்கு தாம்பரம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை காவல் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது தொடர்பு கைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு காவல்துறை அவசர உதவி தேவைப்படுபவர்கள் அந்தந்த கோட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக உங்கள் செல்போனில் எஸ்எம்எஸ் வந்தால் பதிலளிக்கவோ அல்லது OTPகளைப் பகிரவோ வேண்டாம். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலோ புகார் அளிக்கலாம்” என எச்சரித்துள்ளனர். *SHARE NOW*
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (அக்.30) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை பின்பற்றி நெல்லை மாவட்டத்திலும் இந்த உத்தரவு அமலில் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (அக்.30) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.