India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்களை பொருத்தவரை திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை 5ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு சென்னைக்கு புறப்படுவதற்கு பதிலாக 10:35 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதாவது 2 மணி நேரம் தாமதமாக கிளம்பி செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று அங்கு நெல்லை மக்களவைத் தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ், பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தியை சந்தித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ளார். அவரை மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது
இன்று (நவ.3) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 75 மில்லி மீட்டர் அதாவது 7.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ராதாபுரத்தில் 22 மில்லி மீட்டர், நம்பியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 8.2 மில்லி மீட்டர், கொடுமுடிஆறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
கேரளா மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இன்று (நவ.,5) வயநாடு சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் காந்தி இன்று நடத்திய பிரச்சாரத்திலும் நெல்லை எம்பி கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று(நவ.2) மாவட்ட முழுவதும் பரவலாக இரவு வரை மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும்(நவ.3) நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம். உங்கள் பில் நிலைப்பாடு (Bill Status) சரி பார்க்கவும். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் உள்ள இணைய லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும் என நெல்லை மாவட்ட காவல்துறையினர் நேற்று(நவ.2) அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை(நவ.4) திறக்கப்படுகின்றன. விடுமுறைக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக இன்று(நவ.3) பிற்பகல் முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கான இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சிக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in இணையதளத்தின் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து திருநெல்வேலி, ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ நவ.5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (பகிரவும்)
வயநாட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு வயநாட்டில் இன்று (நவ 2) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.